திருவிழா
திருவிழா

களைகட்டுது நம்ம ஊரு திருவிழா!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது அனைத்து முக்கிய நகரங்களிலும் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

கடந்த முறை திமுக ஆட்சின்போது ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில் சென்னை சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இப்போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில்  'நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறக்கூடிய கலைநிகழ்ச்சிகள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படவுள்ளது.

இதில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள், தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து இம்மாதம் 13-ம் தேதிக்குள் தமிழக கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்கள் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள 'நம்ம ஊரு திருவிழா'வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com