பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டா் பட்டம்! வழங்குகிறார் பிரதமா் நரேந்திர மோடி!

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்க உள்ளார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனர்.இதனால் மதுரை மாநகர் மற்றும் விமான நிலையம் நிலையம் ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ட்ரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

இளையராஜா
இளையராஜா

கடந்த ஜூலை மாதம் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நாளை கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது அவரது இசை ரசிகர்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜீவ்காந்தி என 4 பிரதமர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வரும் 5-வது பிரதமர் மோடி என்பதால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com