பழங்குடியினப் பெண்கள்
பழங்குடியினப் பெண்கள்

மனதின் குரல் நிகழ்ச்சி: ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்களை பாராட்டிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து வானொலியில் பேசி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 94-வது பகுதியில் பேசும்போது கோயம்புத்தூர் ஆனைக்கட்டியில் வசிக்கும் பழங்குடியினப் பெண்கள் குறித்து பெருமிதத்துடன் உரையாற்றினார்.

கோயம்புத்தூரில் ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியினப் பென்கள் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணால் டீ கப் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதை பாராட்டினார்.  இதுகுறித்து பிரதமர் பேசியதாவது:

இன்று மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயற்கைப் பொருட்கள் பயன்பாடுகளை வரவேற்கின்றனர்.

அந்த வகையில் ஆனைக்கட்டியில் வசிக்கும் பழங்குடியினப் பெண்கள் அருமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட டீ கோப்பைகளை தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். இதுவரை 10 ஆயிரம் டீ கப்களை இப்பெண்கள் குழு உருவாக்கியுள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், களிமண் கலவையில் தொடங்கி, டீ கப் உருவாக்கி வர்ணம் பூசுதல், இறுதிகட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகலியும் இப்பெண்களே செய்வது பாரட்டுக்குரிய விஷயம்

-இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கோயம்புத்தூர் ஆனைக்கட்டி அருகேயுள்ள கொண்டனூர், பனப்பள்ளி ஆகிய மலைகிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்த சுடுமண் பொருட்களை தயாரித்து வருகின்றனர். டீ கோப்பை மட்டுமனரி, களிமண்ணால் டம்ளர், தட்டுகள் போன்றவற்றையும் தயாரிக்கின்றனர்.  ‘தயா சேவா சதன்’ என்ற தொண்டு நிறூவனம் மூலம் இப்பழங்குடியினப் பெண்கள் இத்தயாரிப்புகளை செய்து வருகின்றனர். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com