அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு!

பாஜக
பாஜக

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நேற்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

பாஜகவில் நடிகைகள் குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் சைதை சாதிக் என்பவர் அவதூறாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக நிர்வாகி சைதை சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார்.

அந்த மேடை பேச்சில் வேறு சில நடிகைகளையும் இரட்டை அர்த்தத்தில் விமர்சித்திருந்தார். இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியையும் முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்து குஷ்பு புகார் கூறினார். கனிமொழியும் இந்த சம்பவத்திற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

இது குறித்த ஆர்ப்பாட்டம் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்றது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். சைதை சாதிக்கை பேச்சை கண்டித்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர். சைதை சாதிக் மீது புகாரும் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை மற்றும்மகளிர் அணி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். அப்போது திமுகவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 370 பாஜகவினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com