தேனி - போடி நாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தேனி - போடி நாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போடி-மதுரை அகல ரயில் பாதையில் 80 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கிக் கொள்ளலாம். ரயில் பாதையில் சில இடங்களில் கிளாம்புகள் சரி செய்ய வேண்டும்.

தங்கப்பாலம் என்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் லைன்களில் மாற்றம் செய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - மதுரை இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் தேனி வரை முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் 2022 மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி, தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர் வேகம் எடுக்க தொடங்கியது. தேனியில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் போடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி, போடி ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யும் பணி, சிக்னல் பொருத்தும் பணி என இதர பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

ரயில் பாதை பணி நிறைவடைந்ததையொட்டி, டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி போடியில் இருந்து தேனி வரை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்தார். அப்போது ரயில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் 118 கி.மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனையடுத்து போடி-மதுரை இடையே ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று அந்தப் பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ளது.

மதுரை முதல் போடி வரை ரயில் இயக்கவும், போடி - மதுரை ரயில் சேவையை விரிவக்கம் செய்து சென்னை வரை ரயில் இயக்க வேண்டும் என தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை ரயில் சேவை திட்ட பணிகள் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com