மனம் உருகி அழுத ரஜினி ....!

மனம் உருகி அழுத ரஜினி ....!

நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும், அவரது ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியுமான வி.எம். சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்சுதாகர்.ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.

வி.எம் சுதாகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக அவருக்கு கிட்னி கோளாறு பிரச்சனை இருந்து வந்தது. அதற்கான செலவை ரஜினிகாந்த் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி.எம் சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். 71 வயதாகும் வி.எம்.சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனையடுத்து ரஜினி தனது நண்பருக்காக மிகவும் மனம் உருகினார். என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்திடையட்டும் என மனம் உருகினார் ரஜினி.

வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com