ரேஷன்  கடை
ரேஷன் கடை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000; தமிழக அரசு அறிவிப்பு!

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. .

தமிழக அரசு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்ததாவது;

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப் படுகிறது.

அந்த வகையில் சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்கள், மற்றும்  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணதொகை வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  

ஒரு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் நிதி கொடுக்கப்படும். ரேஷன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி இருக்கிறது.

குடும்ப அட்டைதார்கள் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அந்த பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com