பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நிலையம் மறுஉருவாக்கம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம், 2002ல் கட்டப்பட்டது. இதன் அருகில் 6.7 ஏக்கர் பரப்பளவில் தனியார் ஒப்பந்த பேருந்து நிலையம் 2003ல் கட்டப்பட்டது.

இந்த இரண்டு பேருநிலையங்களுக்கும் அதிக அளவிலான வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக மாதவரம், வண்டலூர் அடுத்த கிளம்பாக்கம், திருமழிசை அடுத்த இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன.

கிளம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையகட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இந்த புதிய பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் போது கோயம்பேட்டில் தற்போது புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது இடத்தை, வேறு பயன் பாட்டுக்கு மாற்ற சி.எம்.டி.ஏ.,திட்டமிட்டுள்ளது.

ஆம்னி பேருந்து
ஆம்னி பேருந்து

இதற்கான மாற்று திட்டங்களுக்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டன. முதல் கட்டமாக, ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் இடத்துக்கான மாற்று திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் தற்போது ஆம்னி பேருந்து நிலையமாக உள்ள இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டுவதற்கான மாற்று திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஆம்னி பேருந்து நிலையமாக உள்ள 6.7 ஏக்கருடன், சுற்றியுள்ள காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, 16.6 ஏக்கர் நிலத்தை மறுமேம்பாடு செய்வதற்கான மூன்று வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அடுக்குமாடி குடியிருப்பு, கிடங்கு, பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டுவது, எதிர்கால பயன் பாட்டுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் என மூன்று வகை பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் ஒப்புதலுக்கு பின், இதற்கான பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Kalki Online
kalkionline.com