மண்பானை
மண்பானை

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை கொடுக்க கோரிக்கை!

பொங்கல் பரிசு தொகுப்பில் மண் அடுப்பு மற்றும் மண்பானையும் சேர்த்துக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தமிழக மண்பாண்ட தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக களிமண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் ன கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பாண்ட தொழிலை பாதுகாக்கும் வகையில் மண் அடுப்பு மற்றும் மண் பானையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப் பட்டது.

மேலும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்கவும் ஊக்கப்படுத்தும் வகையிலும் மண் பாண்டங்களைத் தயாரிக்க  நவீன முறையில் தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும் என்றூ வலியுறுத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி வழங்கப் படாத நிலையில் இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com