ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் - தமிழக அரசு உதவி!

ஆவின் பாலகம் அமைக்க   ரூ.45 லட்சம் - தமிழக அரசு உதவி!

 மிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க தமிழக அரசு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு   ரூ.45 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என  அரசு தெரிவித்துள்ளது.

இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நிலமற்றவர்களுக்கு பட்டா நிலம்,   சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கு மானியம் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், இத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அமைச்சகம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

இச் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க  50 சதவீதம் மானியத்துடன் தாட்கோ மூலம் கடனும் வழங்கப்படுகிறது. இருந்தாலும், இதுகுறித்த விழிப்புணர்வு இச் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதனால் அவர்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்றாக தற்போது அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-23-ம் ஆண்டுக்கான அறிவிப்பை நடைமுறைப் படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் வாகனம் உறைவிப்பான், குளிர்விப்பான் உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்து ரூ.1.50 கோடி மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட அரசு முடிவெடுள்ளது.

இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்காக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 40 பேருக்கு ரூ.36 லட்சம் மானியம் மத்திய அரசு நிதியில் இருந்து வழங்கப்படும். அதேபோல, 10 பழங்குடியின தொழில் முனைவோருக்கு ரூ.9 லட்சம் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படும்.

எனவே, தொழில் முனைவோர்கள், ஆவின் பாலகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com