
உலகளவில் டெலிகாம் கருவிகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் நிலையில், இக்கருவிகளைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவ முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே நோக்கியா மற்றும் எரிக்சன் கிளை நிறுவனங்கள் 5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது உலகின் முன்னணி டெலிகாம் கியர் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் 4ஜி மற்றும் 5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்கப் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இப்புதிய தளத்தின் மூலம் இந்திய சந்தைக்கான தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தை தேவையையும் பூர்த்திச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் 5ஜி டெலிகாம் கருவிகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.