மெரினாவில் மணற்சிற்பம்! முதல்வர் திறந்து வைத்தார்

மெரினாவில் மணற்சிற்பம்!  முதல்வர் திறந்து வைத்தார்

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான 181 மகளிர் உதவி மையத்திற்கான விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கீதாஜீவன், கே.என்.நேரு, பொன்முடி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி 181 மகளிர்‌ உதவி மையம்‌ சார்பில், ’பெண்ணியம்‌ போற்றுவோம்‌ 2022’‌ என்ற நிகழ்ச்சியானது நவம்பர்‌ 25 முதல்‌ டிசம்பர்‌ 10 வரை நடத்தப்பட்டன.

சென்னை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் எதிரில், மெரினா கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களும் அதனை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம் , பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்வோம், பெண்களுக்கு இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம். பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம் என வாசகங்கள் அடங்கிய தகவல் பலகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பமானது 6 டன் மணல் மற்றும் 1000 லிட்டர் தண்ணீர் உதவியுடன் 7 நபர்கள் கொண்ட குழுவினர் இரண்டு நாட்களில் உருவாக்கியுள்ளனர். இந்த மணற்சிற்பமானது முதல் முறையாக மெரினாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com