எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது!

எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது!

ழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் - கே.கே.பிர்லா அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 இல் வெளியான சூரியவம்சம் -நினைவலைகள் என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் கே கே பிர்லா அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்தியாவின் குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகள் ஒன்றான இந்த விருதை பெறுபவருக்கு பரிசு தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும்.

இந்தியாவின் 22 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூலுக்கு திறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் ஏற்கனவே இந்திரா பார்த்தசாரதி , அ. அ. மணவாளன் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

சரஸ்வதி சம்மான் விருது; விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டு கால கட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குமார் சிக்ரி தலைமையிலான குழுவினர் 22 மொழிகளில் மொழிகளில் இருந்து 22 புத்தகங்களை தேர்வு செய்து பின்னர் அதிலிருந்து 5 புத்தகங்களை தேர்ந்தெடுத்து விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர் அந்த ஐந்து புத்தகங்களில் ஒரு புத்தகத்துக்கு சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com