15 டிசைன்களில் சேலை.. 5 டிசைன்களில் வேட்டி: பொங்கல் ஜாக்பாட்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அத்துடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் எனவும் நேற்று அரசு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்று முன்னர் அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து அமைச்சர் காந்தி நேற்று தெரிவித்ததாவது;
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவது சற்று தாமதம் ஆனாலும் தரமானதாக வழங்கப்படும். தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி சேலைகள் உயரிய தரத்தில் வழங்கப்படும். மேலும் 15 வகையான டிசைன்களில் சேலைகளும் 5 வகையான டிசைன்களில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.