நர்சிங் படிப்புக்கு உதவி தொகை! முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தொழில்முறை ஆங்கில தேர்வு எழுத உள்ளசெவிலிய மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் செவிலியர் பணிக்கு ஆங்கில தேர்வு கட்டாயமாகியுள்ளது திமிழக செவிலியர் பயிற்ச்சி கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் 481 பேர் இத்தேர்வை எழுதுவதற்காக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.

அவர்களை தமிழ்நாட்டு திறன் மென்பட்டு கழகம் தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கிறது. இதற்காக 87.50 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்க படுகிறது.

பயிற்சி பெறும் மாணவர்களுடன் அமைச்சர் மஸ்தான் , அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவத்தின் இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடினார்.

அப்போது தேர்வு கட்டணம் செலுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என மாணவர்கள் கோரினர்.

இது முதல்வர் கவனத்திற்கு செல்ல அதன் தொடர்ச்சியாக தொழில் முறை ஆங்கில தேர்வு எழுத உள்ள மாணவர்களின் காட்டனை சுமையை குறைக்க, ஒரு செவிலி மாணவர்க்கு 7,500 ரூபாய் வீதம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தொழில் முறை ஆங்கிலம் தேர்வு எழுதும், 481 மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அவர்கள் இதன் மூலம் பயன் பெறுவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com