கனமழை எதிரொலி; சென்னையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

கனமழை
கனமழை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி, பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், இன்று பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 29-ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com