கனமழை எதிரொலி! 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள்  விடுமுறை!

கனமழை 
கனமழை 

சென்னை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை

இந்தநிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டைகிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.

அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பல இடங்களில் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அலுவலகம் செல்வோர் மழை நீரில் நீந்தியபடிபேருந்துக்காக காத்து கிடந்தனர்.

வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கிய நீரில் வண்டிகளை ஓட்டி செல்ல மிகவும் சிரம்ப்பட்டனர். ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்க பாதைகளில் வெள்ள நீர் பெருமளவில் சூழ்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com