காணும் பொங்கல் விழா மக்கள் உற்சாகம்! தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது!

காணும் பொங்கல் விழா மக்கள் உற்சாகம்! தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது!

பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று காணும் பொங்கல் , உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் பொழுதைக் கழித்து மகிழும் நாளாக காணும் பொங்கல் தினம் உள்ளது. ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களில் கூடி காணும் பொங்கலை கொண்டாடுவர் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காணும் பொங்கலையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளிலும், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பொதுமக்கள் கடலில் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில்15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

குற்ற நிகழ்வுகளை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மெரினா அருகே நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்படுவர் எனவும் கூறியுள்ளது.

கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போனால் உனடியாக மீட்க, அடையாள அட்டை வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பைக் ரேஸ் நடத்துவதை தடுக்க 25 சாலை பாதுகாப்பு குழுக்களை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது.

சென்னையின் முக்கிய இடங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com