மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட IOCL மூத்த பெண் மேலாளர்! என்ன காரணம்?!

மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட IOCL மூத்த பெண் மேலாளர்! என்ன காரணம்?!

ந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இன் 40 வயதான மூத்த மேலாளர் ஒருவர் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் BBMP தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள SJ பார்க் காவல் நிலைய எல்லையில் உள்ள யூனிட்டி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த அபர்ணா குமாரி, அசோக்நகரில் உள்ள விக்டோரியா லே அவுட்டில் உள்ள தனது வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்டவர் ஜன்னல் வழியாக குதித்ததாக நேரில் பார்த்த சாட்சி பிரேம் போலீசாரிடம் தெரிவித்தார். அலுவலக ஊழியர் ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுக்க முயன்று அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால்,அந்த முயற்சி ஈடேறவில்லை. மாடியில் இருந்து குதித்ததில் பலத்த காயமடைந்த அபர்ணா குமாரி  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆர் ஸ்ரீனிவாஸ் கவுடா, டிசிபி, சென்ட்ரல், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், அதுவே இப்படியான தீவிர நடவடிக்கை எடுக்க ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், அவர் சமீபத்தில் பெங்களூருவில் இருந்து ஒதிசாவுக்கு மாற்றப்பட்டார்,” அதன் காரணமாகக் கூட அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று டிசிபி மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது நாட்குறிப்பில் மூன்று பத்திகள் கொண்ட தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளார், இது அலுவலகத்திற்குச் சென்ற எஸ்.ஜே.பார்க் காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது சகாக்கள் சிலரின் வாக்குமூலத்தையும் போலிஸார் பதிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com