பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் : கமிட்டி இல்லாத நிறுவனங்கள் மீது ஆக்ஷன் ரெடி!

பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள்  : கமிட்டி இல்லாத நிறுவனங்கள் மீது ஆக்ஷன் ரெடி!

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் நடை முறைப்படுத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தந்தாக வேண்டும்.

பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டு பத்து ஆண்டுகளாகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல அரசு நிறுவனங்களில் கூட ஈவ் டீசிங் கமிட்டி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

எந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலும், தங்களது பணியிடங்களில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து விசாரிக்க ஈவ் டீசிங் கமிட்டி அமைக்க வேண்டும். 10 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களாக இருந்தால், இது கட்டாயம்.

தலைமை ஊழியர், மூத்த பெண் ஊழியர் உள்பட குறைந்த பட்சம் 2 உறுப்பினர்கள் கமிட்டியில் இருந்தாக வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் வன்கொடுமைகள் பற்றி கமிட்டி விசாரிக்கும். சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் பெண் ஊழியர்கள் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்.

புகார் தொடர்பாக 9 நாட்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும். புகார் நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஈவ் டீசிங் கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கமுடியும்.

10 ஊழியர்களுக்கும் குறைவாக எண்ணிக்கையில் உள்ள நிறுவனமாக இருந்தால் ஈவ் டீசிங் கமிட்டி அமைக்கத் தேவையில்லை. ஆனால், புகார்களைப் பெற்று, மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

2012-ல் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பின்னரே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு வந்தது. மீ டூ இயக்கம், பணியிடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி பொது இடங்களில் பேச முடியும் என்பதை வெளிக்காட்டியது.

ஆனாலும், ஏனோ தயக்கங்கள் தொடர்கின்றன. பிரதான அரசியல் கட்சிகளிலேயே பாலியல் புகார்கள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும்போது சிறிய நிறுவனங்களால் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com