சரும சுருக்கம் நீக்கும் அழகுக் குறிப்புகள்!

சரும சுருக்கம் நீக்கும் அழகுக் குறிப்புகள்!

ரண்டு டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர உங்களது இளமையான தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றும் பிரச்னையால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல, வயது மூப்பின் காரணத்தினாலும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். சருமப் பராமரிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதின் மூலம் ஓரளவு இதைத் தடுக்கலாம். சரியான தோல் பராமரிப்பு முன் கூட்டிய சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளைத் தடுக்கும். அதற்கு ஆலிவ் எண்ணெய் பெரியளவில் பலனை தரக்கூடியதாக உள்ளது. 

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. இதன் மூலம் ஆலிவ் எண்ணெய் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கவும், சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இரண்டு டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். அதை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தக்காளியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் லைகோபீன் என்கிற கலவையும் உள்ளது. இது திறந்த துளைகளை குறைக்கிறது மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.

இதேபோல், சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, சருமத்தில் தேய்ப்பதாலும் நல்ல பலன்களைப் பெறலாம். இது பொதுவாக சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாற்றில் வைட்டமின் சி உள்ளது. அதனால் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னரும், இதை பயன்படுத்துவது கூடுதல் பலனை தருகிறது.

அதேபோல், ஆலிவ் எண்ணெய் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலிவ் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி சுடுதண்ணீரில் ஆவி பிடித்து வந்தால் சரும செல்கள் சுத்தமாகும். இதனால் கரும்புள்ளிகள் நீங்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அழகுக் குறிப்புகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்வதால் நல்ல பலன்களைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com