12 மணி நேர வேலை திட்ட  சட்ட திருத்தத்தில் உள்ள சில முக்கிய விதிகள் !

12 மணி நேர வேலை திட்ட சட்ட திருத்தத்தில் உள்ள சில முக்கிய விதிகள் !

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 12 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்தும் சட்ட திருத்தத்தில் உள்ள சில முக்கிய விதிகள் குறித்து பார்க்கலாம்.

தற்போது நடைமுறையில் உள்ள 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்கு பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

12 மணி நேரம் வரையிலான தளர்வான பணி நேரம், தொழிலாளர்களின் விருப்பத்தின்பேரில் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தொழிற்சாலையில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட உகந்த பணிச்சூழல், போக்குவரத்து, தங்குமிட வசதி அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 4 நாட்கள் 12 மணி நேரம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மீதமுள்ள 3 நாட்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் மிக நேரப் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும்

வாரத்திற்கு அதிகபட்சம் 60 மணி நேரம்வரை மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கொண்டு வரப்பட உள்ள விதி விலக்குகள் அனைத்தும், தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.

தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், இச்சட்ட திருத்தத்தின் மூலம் இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருமளவு பெருகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பணிநேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும்.

தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு அனுமதி. தொழிலாளர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். இச்சட்ட திருத்தத்தின் மூலம் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருமளவு பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com