ஆவின் நிறுவனத்தில் என்னமோ நடக்குது!

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தபோது, சிக்ஸர் என்றார்கள். பால் கொள்முதல் விலை விஷயங்களில் அதிரடி வரும் என்று மக்களும் எதிர்பார்த்தார்கள். அடுத்தடுத்து வந்தது என்னவோ தலையில் இடிதான்.

பத்தாண்டுகளுக்கு முன்வரை பால் உற்பத்தியில் தமிழகம் டாப் 3 இடத்தில் இருந்தது. தற்போது மகராஷ்டிராவும் கர்நாடாகவும்தான் முன்னிலையில் இருக்கின்றன. தெலுங்கானா பிரிந்து போன பின்னர் தடுமாறிய ஆந்திரா கூட பால் உற்பத்தியில் தமிழ்நாட்டை முந்திவிட்டது.

ஒரே ஆண்டில் மூன்று முறை பால் விலையை தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின. பால் விலையை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, தி.மு.க அரசு கைவிரித்து விட்டது.

ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆவின் நெய், வெண்ணெய் விலைகளும் ஏற்றப்பட்டன. நடப்பாண்டில் பொங்கலுக்குப் பின்னர் பால் விலை ஏறும் என்று வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.

'ஆவின் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. முன்பைவிட விற்பனை கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வால், ஆவின் பால் விற்பனை 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்திருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் குளறுபடிகளோ ஏராளம். விதிகளை மீறி பணியில் சேர்ந்ததாக மேலாளர்கள், துணை மேலாளர்கள் உட்பட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் டெக்னீஷியன். இளநிலைப் பொறியாளர்களில் தொடங்கி உதவியாளர்கள், ஓட்டுநர் என அனைத்து தரப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தது விசாரணையில் தெரிந்தது. மாநிலம் முழுவதிலிருந்தும் வந்த புகார்களை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள 26 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. என்னமோ நடக்குது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com