சென்னை திரும்ப சிறப்பு பேருந்து வசதி...

சென்னை திரும்ப  சிறப்பு பேருந்து வசதி...

மிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகை கொண்டாட வெள்ளிக் கிழமையே கிளம்பி சென்றுவிட்டனர்.

பண்டிகை முடிந்து அனைவரும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்த இரண்டு நாட்களுக்கு (1ம் தேதி மற்றும் 2ம் தேதி) ஆகிய இரண்டு தினங்களும்  தமிழக அரசு 800 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன.

நேற்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்பினர்,

இன்றும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெறவும், முன்பதிவு செய்யவும் www.tnstc.in மற்றும் TNSTC Official App ஆகியவற்றை அணுகுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் போதிய அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவிலும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

XBB.1.5 எனப்படும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த தொற்று குஜராத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் தொற்று ஏற்படாமல் இருக்கக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஊழியர்களும், பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இல்லையெனில் பயணிகளை பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தது பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் மேற்கொள்வர். அப்போதும் சிறப்பு பேருந்து வசதிகளுடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com