அனுமதியின்றி டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறை!

டிரோன்
டிரோன்

சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

-இதுகுறித்து சென்னை காவல்துறை தெரிவித்ததாவது;

சென்னையில் முக்கிய இடங்களான தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டு தலங்கள், தேசிய பூங்காக்கள், மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், திருமணம், கோவில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்ச்சிகளின்போது காவல் துறையின் உரிய அனுமதியுடன் டிரோன்கள்  பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதிக்கப் படுகிறது.

எனவே சென்னையில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள், பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்களைப் பயன்படுத்த வேண்டும்.

-இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com