மாணவி ப்ரியா வழக்கு !கவனக்குறைவு பிரிவில் மாற்றம்!

மாணவி ப்ரியா
மாணவி ப்ரியா

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா காலில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருந்துவமனையில் சோர்க்கப்பட்ட நிலையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அழுகியதாக சொல்லப்படுகிறது. பின்னர் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் கால் எடுக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் .

இதனால் மாணவி ப்ரியாவின் மரணத்தை தொடர்ந்து அவரது தந்தை ரவி நவம்பர்11-ம் தேதி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் மனு ரசீது வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது.

இதற்கிடையில், நவம்பர் 15-ம் தேதி, பிரியா சிகிச்சை பலனின்றி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இறந்தார். இதன் தொடர்ச்சியாக, மேற்கூறிய மனு ரசீது சட்டபிரிவு 174 (சந்தேகமரணம்) என்று மாற்றப்பட்டது. அன்றைய தினமே, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மருத்துவக் கல்வி இயக்குநரின் அறிக்கையில், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின் பிரியாவிற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய மருத்துவ கவனிப்பில் ஏற்பட்ட குறைபாடே அவரது இறப்பிற்கு காரணம் என குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து, மேற்படி காவல்நிலையத்தின் சட்டப் பிரிவு 174 லிருந்து 304 (A) க்கு (கவனக்குறைவு மரணம்) மாற்றம் செய்யப்பட்டு, தொடர் புலன் விசாரணை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அலட்சியப்போக்கில் தங்களது மருத்துவ பணிகளை மேற்கொண்ட நபர்களை கண்டறிந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com