மாற்று மாநில மாணவர்களுக்கு இனி தமிழோடு சேர்த்து அவர்கள் தாய்மொழியும் கற்பிக்கப்படும்!

மாற்று மாநில மாணவர்களுக்கு இனி தமிழோடு சேர்த்து அவர்கள் தாய்மொழியும் கற்பிக்கப்படும்!

2023 - 2024 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் குழந்தைக்கும் கல்வியளிக்கும் பொருட்டு அவர்கள் தாய்மொழி கல்வியையும், தமிழையும் இணைத்து கற்பிக்க தமிழ் மொழி கற்பிப்போம் திட்டம் தொடங்க உள்ளதாக பேசினார்.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் மொழி கற்போம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கூறியது, தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இருக்கின்றனர். அவர்களை பேச்சளவில் நம்முடைய சகோதரர்கள் என்று கூறவில்லை, மாறாக அவர்களை அரவணைத்து அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு செல்லும் நோக்கில் அவர்களுடைய தாய் மொழியை கற்பிப்பதோடு, இணைத்து தமிழ் மொழியையும் கற்பிக்கும் திட்டமான தமிழ் மொழி கற்பிப்போம் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டு குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதோடு அவர்கள் தாய் மொழியும் இணைந்து தமிழ் மொழியும் கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது என்று கூறினார். நம்மை நாடி வந்தவர்களுக்கு நாம் தமிழை கற்பிப்பது ஒரு சிறந்த முயற்சி. இந்த திட்டத்திற்காக 71.9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக அரசு கல்வி வளாகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது இதற்கு எனது பாராட்டுக்கள் என்று கூறினார். மேலும் தொடர்ந்து 5 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்பித்த இனியா என்ற ஐந்து வயது மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com