ஆடு, கோழி வளர்க்க 50% மானியம்: மத்திய அரசு அறிவிப்பு!

ஆடு, கோழி வளர்க்க 50% மானியம்: மத்திய அரசு அறிவிப்பு!

திருத்தணி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்க திட்டத்தின்கீழ் கோழிகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் அத்கபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

-இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்ததாவது;

பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் கோழி, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைப்பதற்கான மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

அதேபோல் ஆடுகள் வளர்க்கும் திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய்  மானியமாக இரண்டு தவணைகளிலும், பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு, அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய் வரை மானியமும் வழங்கப்பட உள்ளது.

தனி நபர், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் பிரிவு, எட்டு நிறுவனங்கள் தகுதியானவர்கள் ஆவர். தொழில்முனைவோர், தகுதியான நிறுவனங்கள் வங்கிகளில் இந்த திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் சங்கத்தினர் https://nim.udyamimitra.in/ என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

இதுதவிர https://nlm.udyamimitra.in/ Tamil Nadu Livestock Development Agency (TNLDA) மற்றும் https://www.tenders.tn.gov.in ஆகிய இணைய தளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com