கரும்பு ஒரு டன் 90 ரூபாயிலிருந்து இன்று 2000 ரூபாய்குத்தான் விற்கிறது.

கரும்பு ஒரு டன் 90 ரூபாயிலிருந்து இன்று 2000 ரூபாய்குத்தான் விற்கிறது.

விழுப்புரம்

சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இங்கு எடுக்கப்பட்ட நிலத்திற்கு 200 ரூபாய் இழப்பீடு வாங்குகிறார்கள். நாகப்பட்டினத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு 10 மடங்கு உயர்த்தி 2000 ரூபாய் வழங்குகிறார்கள்.

இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி உள்ளது.

அய்யாக்கண்ணு சில வருடங்களுக்கு முன்பு விவசாயிகளின் கோரிக்கையை முன் வைத்து டெல்லிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான விவசாயிகளை அழைத்து சென்று பலவித போராட்டங்களை நடத்தினார். அரை நிர்வாண போராட்டமும் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2019 தேர்தலில் மோடியை எதிர்த்து விவசாயிகள் அனைவரும் வாரணாசியில் போட்டி இட மனு தாக்கல் செய்து அதன் பின் வாபஸ் பெற்றார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அய்யாக்கண்ணு கூறியதாவது,

நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராமல் அப்படியேதான் உள்ளது.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில்கூட பாரபச்சம் காட்டுகிறார்கள். 200 ரூபாய் என்று ஒரு இடத்துக்கும், 2000 ரூபாய் என்று நாகப்பட்டினத்தில் கையகப்படுத்திய இடத்துக்கும் வழங்குகிறார்கள். இதை எதிர்த்துதான் இன்று போராட்டம் தொடங்கியுள்ளோம்.

நாங்கள் கேட்கும் தொகை அதிகம் என்று சொல்ல முடியாது. இரட்டிப்பு தொகை தருவதாக சொல்லிவிட்டு இப்போது ஏமாற்றுவது விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயிகள் நாட்டின் கண்கள், அவர்கள் “சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்று விவசாயிகளை உயர்த்திப் பேசுவதும், தேர்தலுக்குப் பிறகு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

உதாரணத்துக்கு ஒன்று சொல்லுகிறேன்.

முன்பு அரசு ஆசிரியர்கள் மாத சம்பளம் 90 ரூபாய். இன்று ஒரு லட்சத்துக்கும் மேல் வாங்குகிறார்கள்.

ஆனால் கரும்பு ஒரு டன் 90 ரூபாயிலிருந்து இன்று 2000 ரூபாக்குத்தான் விற்கிறது.

இதில் புரிந்துவிடும், யார் உயர்ந்திருக்கிறார்கள், யார் நசுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று, இதைவிட உதாரணம் வேற சொல்லவும் வேண்டுமா- இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை என்றார் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com