சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்!  மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்! மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினியின் உருவம் பதித்த கேக்கை வெட்டி, உற்சாகமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Chief Minister Stalin
Chief Minister Stalin

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையுலக நண்பர்கள் அரசியல் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த பாபா திரைப்படம்

ரி ரிலீஸ் செய்யப்பட்டது. பாபா திரைப் படத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெருத்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com