
சென்னை தி.நகர் தேவஸ்தான பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதுகிறது. பொதுவாக சனிக்கிழமை என்றாலே ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூட்டம்.
இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வேங்கடேச பெருமாளை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். அங்கு சனிக்கிழமைகளில் திருப்பதியிருந்து வரும் லட்டு பிரசாதங்களை விற்பனைக்கு வைக்கப்படுவது குறிப்பிட தக்கது. இன்றும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து லட்டு பிரசாதங்களை வாங்கி செல்கின்றனர்.
புரட்டாசி பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் வெங்கடேஷ் பெருமாள் கேட்கும் வரத்தை கொடுப்பார் என்பது பக்தர்களின் ஏக நம்பிக்கைகளில் ஒன்று. புரட்டாசியின் 5 வாரங்களிலுமே வீடுகளில் தளிகை படைத்து ஏழுமலையனை வழிபடுவது வருவது நீண்ட நாள் வழக்கம்.
இதனை தவிர சென்னையின் பிறபகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேக அலங்காரங்களும் செய்யப்பட்டு புரட்டாசி சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.