வெளுத்துக் கட்டும் விவசாயத்துறை / இலக்கை எட்டிய நெல் கொள்முதல்; காஸ்ட்லி ஆகும் தமிழ்நாட்டு நெல்!

வெளுத்துக் கட்டும் விவசாயத்துறை / இலக்கை எட்டிய நெல் கொள்முதல்; காஸ்ட்லி ஆகும் தமிழ்நாட்டு நெல்!

கொரோனாவுக்கு பிந்தைய தமிழ்நாட்டில் விவசாயத்துறை மட்டும் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஊரே முடங்கியிருந்த கொரோனா தொற்றுக்காலத்தில் கூட நெல் உற்பத்தியில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தை காட்டியிருந்தது.

கொரோனாவுக்கு முன்னர் 25 லட்சம் டன் அல்லது அதற்கு குறைவான அளவு மட்டுமே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பருவ மழை பொய்ப்பதும், காவிரியில் நீர் வரத்து தாமதமாவதும் தொடர் கதையாக இருந்தது வந்தது. விவசாயப் பரப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

முன்னர் 10 முதல் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே அவர்களுக்கு பணமும் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

திண்டுக்கல், திருச்சி, தேனி, கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் மண்டல வாரியாக கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மைத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு 3,500 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாநில அளவில் 43 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 45 லட்சத்தை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படவிருக்கிறது

விவசாயிகளின் வசதிக்காக எங்கு வேண்டுமானாலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கலாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் நெல் கொள்முதல் நிலையம் திறந்து கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டிலேயே டெல்டாவில்தான் நெல் சாகுபடி அதிகம் என்றாலும் மொத்த சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. காரணம், உற்பத்திச் செலவு இந்தியாவின் எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டில்தான் அதிகம். நாட்டின் சராசரிச் செலவைவிட தமிழ்நாட்டின் நெல் உற்பத்திச் செலவு 26.01% அதிகமாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் விளையும் நெல், ரொம்பவே காஸ்ட்லி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com