பள்ளி
பள்ளி

பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வுகள் தேதி மாற்றம்! தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி,12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையிலானநடைபெறும் என்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

10,11,12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 10 ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் வரக்கூடிய தேதிகளில் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்முறை பொதுத்தேர்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கபடும் இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 11,12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com