தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப் பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதன் பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3- வது பட்ஜெட் இது.

மதுரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அவர்களிடம் சபாநாயகர், பட்ஜெட் வாசித்து முடித்த பிறகு உங்கள் கோரிக்கைகள் கூறுங்கள் என்று தெரிவித்தார்.

எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரையைத் தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப் பட உள்ளது. இதுதவிர, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com