தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

மலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, அவரை எட்டு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்து இருக்கிறது.

அதைத் தொடர்ந்து அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை இருவேறு அமைச்சர்களிடம் பிரித்து கூடுதலாக ஒப்படைக்க முதலமைச்சர் முடிவு செய்தார். அதன்படி, அதற்கான பரிந்துரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் முதல்வரின் கடிதம், 'Mislead and Incorrect' ஆக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி அதை  திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து ஆளுநரின் கடிதத்துக்கு தமிழக அரசு தரப்பில் பதில் கடிதம் அளிக்கப்பட்டது.

இது குறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘இம்முறை அனுப்பிய கடிதத்தை ஆளுநர் ஏற்பார் என நம்புகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். அமைச்சரவை இலாகா மாற்றம் என்பது முதல்வரின் விருப்பத்தின் பெயரிலானது, இதில் ஆளுநர் தலையிட முடியாது என கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்து இருந்தார்.

இந்நிலையில், ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது’ என்ற முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்து இருக்கிறார். அதேசமயம், ‘அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குக் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்துவந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com