செல்பி எடுக்கக்கூடாது: அமைச்சர் வேண்டுகோள் !

பருவ மழைக்கு தயார் நிலையில் தமிழகம் !
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், மேட்டூர் அணையிலிருந்து இன்று 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளதாகவும், அந்த நீருடன் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளின் தண்ணீரும் சேரும் காரணத்தால் முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், தகுந்த ஏற்பாடுகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்றும், செல்பி எடுக்கக் கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

பருவ மழை
பருவ மழை

மேலும், மாவட்ட நிர்வாகம் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தேசிய மாணவர் பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 108 பேர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படுமோ அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 23 நிவாரண மையங்களில் 2274 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com