தக்காளி ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை:வரலாறு காணாத விலை ஏற்றம்!

தக்காளி
தக்காளி

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி  200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய வரலாற்றில் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வரலாற்றில் முதல் முறை என்று கூறுகின்றனர் விற்பனையாளர்கள். நாடு முழுவதும் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகின்றனர் வேளாண் வல்லுநர்கள்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள பருவநிலை மாற்றம் இந்தியாவிலும் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. மறைமுகப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த பருவநிலை மாற்றம் தற்போது மக்களை நேரடியாக பாதிக்க கூடிய விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் இருக்கிறது. மேலும் பொதிய மழையின்மை, அதே சமயம் ஒரு பகுதியில் அளவுக்கு அதிகமான மழை, சுட்டெரிக்கும் வெயில், கடும் பணி போன்றவை நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

இதன் காரணமாக தக்காளி பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பான்மையான குடும்பங்கள் உணவுகளில் தக்காளி பயன்படுத்துவதை அதிக அளவில் குறைத்திருக்கின்றனர். சிறிய உணவகங்களில் தக்காளி பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி தக்காளி நாடு முழுவதும் முக்கிய பேசு பொருளாக மாறி இருக்க கூடிய நிலையில் இன்று ஜூலை 31 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும், திருச்சி காந்தி மார்க்கெட்டிலும் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது எளிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. மேலும் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உணவுக்காக ஒதுக்கும் தொகை இரண்டு மடங்கு  கூடுதலாக செலவாகிறது என்று புலம்புகின்றனர்.

#தக்காளி #தக்காளி விலை ஏற்றம் #அத்தியாவசிய பொருட்கள் #விலையேற்றம் #பருவநிலை மாற்றம் 

#Tomato #Tomato price #Tomato price hike #Price hike # Shortage of food items

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com