கார்கில் வெற்றி நாள் : திருச்சியில் மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

 மேஜர் சரவணன் நினைவு இடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மேஜர் சரவணன் நினைவு இடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிகளில் ஊடுருவியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு காஷ்மீரின் காரிகில் பகுதியில் போர் மூண்டது.

மூன்று மாதங்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ஜூலை 26 ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை மீட்டனர். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியை கார்கில் விஜய் திவாஸ் என்று கொண்டாடி வருகிறது. 

இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்து இறங்கியவுடன் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள மேஜர் சரவணன் நினைவு இடத்தில்  மரியாதை செலுத்தினார். இந்திய நாட்டிற்காக போராடி என்னுயிர் நீத்த மேஜர் சரவணன் திருச்சியை சேர்ந்தவர். அதனால் அவருக்கு திருச்சியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

மேஜர் சரவணன் ஹீரோ ஆஃப் பட்டாலிக் என்று அழைக்கப்படுகிறார். மார்ச் 11 1995 ல் இந்திய ராணுவத்தின் பீஹார் படைப்பிரிவில் வீரராகச் சேர்ந்த சரவணன். தொடர் உழைப்பின் காரணமாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் மே 28, 1999 அன்று 14,229 அடி உயரத்தில் அமைந்துள்ள நாட்டின் எல்லை பகுதியான பட்டாலிக் பகுதியில் ஊடுருவல் நடைபெற்றது. அந்தப் பகுதியை மீட்கும் பணி மேஜர் சரவணன் இடம் தரப்பட்டது. இமயமலையில் நிலவும் கடும் குளிர் பணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு பணியை மேஜர் சரவணன் தலைமையில் இந்திய வீரர்கள் மேற்கொண்டனர்.

அப்போது மே 29 விடியற்காலை 4 மணி அளவில் நடைபெற்ற கடும் சண்டையில் மேஜர் சரவணன் படுகாயம் அடைந்தார். அப்போதும் எதிரிகளுடன் சண்டை செய்து இருவரை சுட்டு வீழ்த்தினார் மேஜர் சரவணன். பிறகு தலையில் குண்டு பாய்ந்து உயிர் இழந்தார். நாட்டைக் காத்து இன்னுயிரித்த சரவணனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும் மேஜர் சரவணனின் தந்தை  லிப்டினல் கார்னர் மாரியப்பன் இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹீரோ ஆப் பாட்டாலிக் என்று இந்திய அரசு மேஜர் சரவணன் பெருமைப்படுத்தியது.  இதைத் தொடர்ந்து மேஜர் சரவணன் சொந்த ஊரான திருச்சியில் கன்டோன்மென்ட் பகுதியில் மேஜர் சரவணனுக்கு நினைவு இடம் அமைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com