பள்ளி மாணவ மாணவிகளின் பொறுப்பற்ற செயலால் ஆசிரியர்கள் பெற்றோர் வேதனை.

பள்ளி மாணவ மாணவிகளின் பொறுப்பற்ற செயலால் ஆசிரியர்கள் பெற்றோர் வேதனை.

ன்றைய மாணவ செல்வங்களுக்கு அதீத சுதந்திரம் இருப்பதால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் அதன் பின் விளைவுகளையும் அறியாமல் செய்யும் செயல்களால் அவர்களின் பெற்றோரும், ஆசிரியர் களும்தான் வேதனைப் படுகிறார்கள். அதிலும் அலைபேசி கைகளில் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகள் உடனடியாக பொதுவில் பகிரப்பட்டு மக்களின் பார்வைக்கும் வந்து கண்டங்களுக்கு உட்படுகிறது. சில மாணவர்களின் செயலால் ஒழுக்கமான அந்தப் பள்ளியின் நற்பெயரும் பாதிக்கப்படுகிறது. அப்படி ஒரு செய்திதான் இது.

அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்தும், 40 ஆசிரியர்கள் பணிபுரிந்தும் வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் ஒன் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்து மேஜை நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின் வசதிகள் ஆகியவற்றை அடித்தும் சேதப்படுத்தினர்.

        மாணவர்களுக்கு ஈடாக தாங்களும்  சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை நாற்காலிகளை சேதப்படுத்தினர். இது குறித்து அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ரகளையில்  ஈடுபட்ட மாணவ மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பெற்றோரின் வேண்டுகோளினை ஏற்று எச்சரிக்கை செய்து பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாணவ மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது. இந்த நிலையில் மாணவ மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய  காணொளிப்பதிவு வாட்ஸப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அந்தப் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியது “ அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மேஜை நாற்காலிகளை சில மாணவ மாணவிகள் அடித்து சேதப்படுத்தும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அது  தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது பள்ளியில் இந்த செயலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் ஐந்து நாட்கள் சஸ்பென்டு செய்யப்பட்டு உள்ளனர்” என்றார்.

        தங்கள் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். தங்களிடம் பயிலும் பிள்ளைகள் நல்ல பெயருடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றே நினைத்து கல்வியைக் கற்றுத் தருகின்றனர் ஆசிரியர்கள். ஆனால் இப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு எப்படி துணிவு வருகிறது? எது காரணம்? எனும் கேள்வியே மக்கள் மனதில் எழுகிறது. இந்த சம்பவம் ஆசிரியர்கள் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் இப்போதைய நிலை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com