கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து: பெண் பலி!

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து: பெண் பலி!

புதுச்சேரிக்கு அருகில் மகனுடன் இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்த பெண் ஒருவர், கார் மோதியதில் படுகாயமடைந்து புதுச்சேரி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விழுப்புரம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த 50 வயது ஜீனத் பேகம், தன் மகன் அப்துல் ரஸத்துடன் மோட்டார் சைக்கிளில் நேற்றைய தினம் புதுச்சேரி சென்றிருக்கிறார். ஜீனத் பேகம் வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணிக்க அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் சின்னமுதலியார் சாவடியைக் கடக்கும் போது அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலை நடுவே நிறுத்தப்பட்டதால் அதில் மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு அப்துல் ரஸாக் தனது இருசக்கர வாகனத்தின் பிரேக்கை அழுத்தி வேகத்தைக் குறைக்க முயற்சித்திருக்கிறார். அப்போது வாகனம் நிலைகுலைந்ததில் பின்னால் அமர்ந்திருந்த ஜீனத் பேகம் கீழே சரிய அப்போது சாலையில் அந்த வழியாக வந்து கார் அவர் மீது ஏறியது. இதனால் தாய், மகன் இருவருமே படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கோட்டகுப்பம் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துக் குழுவினர் உடனடியாக அவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி ஜீனத் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com