கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.. 7 பேர் பலி!

வெடி விபத்து ஏற்பட்ட பகுதி
வெடி விபத்து ஏற்பட்ட பகுதி

கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட பட்டாசு குடோன் வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில், ரவி என்பவருக்கு சொந்தமாக தனியார் பட்டாசு குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் காலை 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மல மல என பரவி குடோன் முழுவதும் எரிந்துள்ளது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் மொத்தமும் வெடித்து சிதறின.

இந்த கோர விபத்தில் அருகில் இருந்த கடை மற்றும் 3 வீடுகள் எரிந்து தரை மட்டம் ஆயின இந்த கோர விபத்தில் தற்போது வரை 7 பேர் பலியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, அவரது மகள் ரித்திகா, மகன் ரித்திஷ், மற்றும் அருகில் இருந்த ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி மற்றும் இப்ராஹிம், இம்ரான் உள்ளிட்ட 7 பேர் பலியாகியுள்ளதாக தற்போது வரை தகவல் கிடைத்துள்ளது.

சம்பவிடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் வைத்து இடிபாடுகள் உள்ளே யாராவது சிக்கி உள்ளனரா என்பது பற்றி தற்போது மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் 4க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்கள் வந்து தீயணைத்து வருகின்றனர். தற்போது சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக் குமார் உள்ளிட்டோர் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இரண்டு மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com