வெள்ள நீர் கால்வாய் பணி
வெள்ள நீர் கால்வாய் பணி

தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் பணி தீவிரம் !

திருநெல்வேலியில் தாமிரபரணி , நம்பியாறு நதி நீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாயை, வடகிழக்கு பருவ மழைக்குள் முடிக்க திட்டமிட்டு,பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து வருகின்றது.

இத்திட்டம் நிறைவேறினால் 41 ஆயிரத்து 995 ஏக்கர் புதிய பாசனப் பரப்பு உட்பட, 56 ஆயிரத்து 909 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பத்து ஆண்டுகளாக கிடப்பில் இருந்து தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்தை, வடகிழக்கு பருவ மழைக்குள் முடிக்க இரவு-பகலாக பணிகள் தற்போது நடந்து வருகின்றது.

இதன் வாயிலாக,56ஆயிரத்து 909 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும். திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர்,டிசம்பரில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையின் போது, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிறைந்தும்,13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி நீர் வீணாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளமாக கடலுக்கு செல்கிறது.

தாமிரபரணி
தாமிரபரணி

இந்த வெள்ள நீரை, திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி பகுதியான நாங்குநேரி, திசையன்விளைக்கு திருப்பி விடுவதற்காக, 2009ல் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்டம், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளன. வினாடிக்கு, 3,200 கன அடி நீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள வெள்ள நீர் கால்வாயில், தற்போது முதல் கட்டமாக, 1,300 கன அடி வீதம் நீர் செலுத்தப்படும். இதனால், 41 ஆயிரத்து 995 ஏக்கர் புதிய பாசனப் பரப்பு உட்பட, 56 ஆயிரத்து 909 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com