நூறு நாள் திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் பெண்களுடன் உரையாடிய முதல்வர்.

நூறு நாள் திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் பெண்களுடன் உரையாடிய முதல்வர்.

ட்சிக்கு வருவதை விட அந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டறிந்து ஏதேனும் குறைகள் இருந்தால் அதைக் களைவதே அரசை ஆளும் முதல்வரின் தலையாய கடமை. நேற்று திருச்சி சென்ற முதல்வர் அப்படியொரு கலந்துரையாடலைத்தான் நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

நேற்று திருச்சி சென்ற முதல்வர் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மீதான  ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது லால்குடி அருகே உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணிகளை செய்து கொண்டிருந்த பெண்களிடம் மு க ஸ்டாலின் கலந்துரையாடினார். 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் இருந்த பெண்களிடம் மு.க ஸ்டாலின்  கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு அந்த பெண்களுடன் மு. க. ஸ்டாலின் மகிழ்ச்சியாக உரையாடியது அனைவரையும் கவர்ந்தது.   

அப்போது முதலாவதாக அந்த பெண்களிடம் மு க ஸ்டாலின் ஊர் பெயரை கேட்டார் அதற்கு பெண்கள் தங்களுடைய ஊர் பெயர் ஆலங்குடி என்று கூறினார்கள் தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் மு க ஸ்டாலின் உரையாடினார். அந்த சுவையான உரையாடல் வருமாறு...

கூலி சம்பளம் எல்லாம் எப்படி கிடைக்கிறது? 

285 கொடுக்கிறார்கள்...

பணம் எப்படி கொடுக்கிறார்கள்?

வங்கி மூலமாக கொடுக்கிறார்கள்..

உங்களுடைய சூப்பர்வைசர் யார் அவர் மூலமாக பணம் வருகிறதா?

பெண்கள் ஆமாம்...

எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள் ?  

தொடர்ந்து வேலை செய்கிறோம்.

தொடர்ந்து என்றால் எத்தனை நாட்கள் என்று சொல்லுங்கள் என முதல்வர் கேட்க...

100 நாட்கள் வேலை செய்கிறோம் சார்.

என்ற அவர்களின் பதிலைக் கேட்டு, 100 நாட்கள் எப்படி வேலை செய்ய முடியும்? என்று கேட்டார்.  பின் அந்தப் பெண்கள்  “உங்களை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை சார். இப்போது உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். சாமியைப்  பார்த்த மாதிரி இருக்கிறது.”என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல... ஸ்டாலின் “ ஆட்சி திருப்தியாக இருக்கிறதா? குறை இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்க “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது குறை எதுவும் இல்லை நினைத்ததை நிறைவேற்றி விட்டீர்கள் சார். மிகவும் சந்தோஷம் சொன்னதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ”.

“எத்தனை பேர் இங்கு வேலை பார்க்கிறீர்கள்?” 

75 பேர் வேலை பார்க்கிறோம்.”

இந்த வேலை எத்தனை நாட்களாக செய்கிறீர்கள்?  \

“இன்று முதல் செய்கிறோம்”.

“இன்றைக்கு தான் ஆரம்பித்தீர்களா ஏற்கனவே எங்கு வேலை செய்தீர்கள்?

“பக்கத்தில் இருக்கும் இடத்தில் வேலை செய்தோம்” இவ்வாறு அந்த உரையாடல் நடந்தது

இதையடுத்து பள்ளி சென்று திரும்புவதற்கு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கிராமங்களில் பேருந்து வசதி இல்லை, வீடு கட்டுவதற்கு இடவசதி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்த பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் முதல்வரிடம் முன் வைத்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்து விட்டு நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதி அளித்தார். 

முதல்வரின் பாகுபாடற்ற இது போன்ற கள உரையாடல்கள் சாமான்ய மக்களிடம் அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது என்பது உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com