பணி நியமன ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்

பணி நியமன ஆணைகளை வழங்கினார் தமிழக முதல்வர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் பல்வேறு சம்பவங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று, ஆராய்ந்து தகுதி அடிப்படையில், பணிகாலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில் முதல் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்திற்கு 6 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு
11 நபர்களுக்கும், களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு 45 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 3 நபர்களுக்கும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 5 நபர்களுக்கும், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு 1 நபருக்கும், காவலாளி பணியிடத்திற்கு 13 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com