படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரல்! சாதனை பெண் பவித்ரா!

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரல்! சாதனை பெண் பவித்ரா!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. பெங்களூரு ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற மனோகரன் என்பவரின் மகள் இந்த வீர மங்கை பவித்ரா. இவர் ராணுவத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 9 மாத காலம் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். தற்போது பயிற்சி நிறைவடைந்து லெஃப்டினன்ட் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். படுகர் இனத்தை சேர்ந்த முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக பொறுப் பேற்க உள்ளார் பவித்ரா.

கடந்த அக்டோபர் மாதம் 29- ம் தேதி சென்னையில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சி பெற்றமைக்கான வாள் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றிருக்கிறார். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக பெருமையுடன் ஜம்மு காஷ்மீரில் பொறுப்பேற்க இருக்கும் பவித்ரா, சொந்த ஊருக்கு வருகைத் தந்திருந்தார். பவித்ராவுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடினர்.

படுகர் இனத்தில் முதல் பெண் லெஃப்டினன்ட் ஜெனரலாக உயர்ந்து வெற்றிதடம் பதித்திருக்கும் பவித்ராவுக்கு தற்போது பல்வேறு இடங்களிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com