ரூ.1 கோடி விவகாரம் உண்மைதான் ...  ராஜேந்திர பாலாஜி!

ரூ.1 கோடி விவகாரம் உண்மைதான் ... ராஜேந்திர பாலாஜி!

ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் பத்திரிகையாளர் முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் எம்எல்ஏ சீட்டுக்காக கேபி முனுசாமி ரூபாய் ஒரு கோடி கேட்டார் என்று இருந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் “அரசியலில் பணம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள ஆடியோ உண்மையாக இருக்கலாம் என முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

அந்த ஆடியோவை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, கே.பி. முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சியில் எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பொறுப்புகள் வாங்கிக் கொடுப்பதாக கூறி பல பேரிடம் அவர் பணம் வசூலித்து ஏமாற்றியிருப்ப தாகவும், என்னிடமும் முனுசாமி பணம் ஒரு கோடி ரூபாய் கேட்டார் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது,

“ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மைதான். ஆனால் எம்.எல்.ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார் என்பது உண்மையில்லை. அரசியலில் கொடுங்கல் வாங்கல் சகஜம், இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் தான் எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை.

 அதிமுக நிர்வாகிகளிடம் கேபி முனுசாமி பணம் கேட்டதாக ஓபிஎஸ் அணி ஆடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com