தமிழக அரசுப் பள்ளிகளில் இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படக் காட்சி!

'தி ரெட் பலூன்' திரைப்படக் காட்சி
'தி ரெட் பலூன்' திரைப்படக் காட்சி

வண்ணப்படம் தமிழக அரசு பள்ளிகளில் இன்று  "தி ரெட் பலூன்’ என்ற திரைப்படக் காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை சிறார் திரைப்படங்களை திரையிடவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து அக்டோபர் மாதத்திற்கான திரைப்படமாக இன்று “தி ரெட் பலூன்" படம் திரையிடப்படுகிறது.

கடந்த 1956-ம் ஆண்டில் வண்ணப்படமாக வெளிவந்த பிரெஞ்சு மொழி திரைப்படமான "தி ரெட் பலூன்” ஆஸ்கர் விருது, கேன்ஸ் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகள் பல பெற்ற குறும்படம் என்பது குறிப்பிடத் தக்கது.

படம் திரையிட்டு முடித்ததும் மாணவர்கள் அப்படம் குறித்த கலந்துரையாடல், படத்தின் ஒரு சில காட்சிகளைப் பற்றி விவாதித்தல், மாணவர்கள் குழுவாகவோ அல்லது தனி நபராகவோ அத்திரைப்படத்தின் காட்சிகளை தமிழில் நடித்து காட்டுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்களை ஊக்குவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com