கொடைக்கானல் காடுகளில் சந்தன மரம் வெட்டிய மூவர் கைது!

கொடைக்கானல் காடுகளில் சந்தன மரம் வெட்டிய மூவர் கைது!

கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறையினருக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் சந்தன மரம் வெட்டியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடைக்கானல் மலையில் சந்தேகத்திற்குரிய வகையில் மூவர் காட்டுப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் இந்த மூவரின் நடமாட்டம் குறித்து கொடைக்கானல் வன இலாகா அதிகாரிகளிக்கு தகவல் அளித்தனர். வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பகுதியில் ரோந்து செல்லும் போதும் இவர்களது நடமாட்டைத்தைக் கவனித்திருந்தனர். கொடைக்கானல் காட்டுப்பகுதியில் வளரக்கூடிய விலை உயர்ந்த சந்தன மரங்கள், தேக்கு மரங்களை வெட்டிச் சென்று வெளி மார்க்கெட்டுகள் விற்று பணம் சம்பாதிக்கும் மக்கள் அப்பகுதியில் அவ்வப்போது இப்படியான சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது போலீஸ் ரெகார்டுகளில் பதிவாகி இருக்கிறது.

சந்தனமரத்தைப் பொருத்தவரை அதற்கான மார்கெட் டிமாண்ட் மிக அதிகம். அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என சந்தன மரத்திலிருந்து கிடைக்கக் கூடிய அனைத்துப் பொருட்களுமே விலை உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. எனவே இந்த மரங்களை வெட்டிச் சென்று விற்றால் அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என சமூக விரோதிகளுக்கு நன்றாகவே தெரியும். அப்படி ஒரு முயற்சியில் இறங்கிய போது தான் தற்போது இந்த மூவரும் பிடிபட்டிருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை சந்தன மரங்களை வெட்டுவது மட்டுமல்ல, வீட்டில் அல்லது தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்ப்பது சட்ட விரோதமான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் தற்போது கொடைக்கானல் காட்டில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட மூவரும் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் முறையே ராஜேந்திரன் (57), வெள்ளைத் தாயி (55), மற்றும் போதுமணி (50) எனத் தெரிய வந்துள்ளது. தற்போது இவர்களது பின்புலம் என்ன? இவர்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக சந்தன மரத்தை வெட்டினார்களா? அல்லது யாருடைய தூண்டலின் பேரில் வெட்டினார்களா? எனும் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com