தக்காளி விலை உயர்வு: விளைச்சல் அதிகரிக்க புதிய வழி!

தக்காளி
தக்காளி

தக்காளி விலை வியர்வை கட்டுப்படுத்துவதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதுமே தக்காளி முக்கிய பிரச்சினையாக மாறி உள்ளது. கிலோ 200 ரூபாய் வரை விற்கப்படுவதால் மக்கள் தக்காளி பயன்படுத்துவதை பெருமளவில் குறைத்து விட்டனர். இந்த வரலாறு காணாத விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது.

மேலும் இந்தியாவில் 8. 42 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து 2.60 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் இருந்து 1.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தக்காளி, அதிலிருந்து 27 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திராவில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 23 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் 70 ஆயிரம் ஹேக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 21 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 54,000 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் 16.23 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்த அளவிலான தக்காளி உற்பத்தி செய்யப்படுவதால் தமிழ்நாடு அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 56 சதவீதம் தக்காளி உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த வாரம் வேளாண்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் தக்காளியை பொறுத்தவரை விதை இட்டு 25 நாட்களுக்கு பண்ணை பராமரிப்பு இருக்க வேண்டும். இப்படியாக நடவுக்குப் பிறகு 55 நாட்கள் கடந்த பிறகு அறுவடைக்கு தயாராகும். இவைகள் 10 முதல் 12 மாதங்கள் வரை பயன் தரக்கூடியதாக இருக்கும். மேலும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால் நாடு முழுவதும் கோடை காலங்களில் 34.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. அளவுக்கு அதிகமான தண்ணீரும் தக்காளி விளைச்சலுக்கு கேடாக அமையும்.

இவ்வாறு உள்ள பிரச்சனைகளை கலைந்து தக்காளி சாகுபடியை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தவும், குறுகிய கால உற்பத்தியை செய்வதற்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றும், குறுகிய கால ரகங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.

அதோடு தக்காளி விளைச்சலை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாக ஹெக்டேர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கான குச்சிநட 25 ஆயிரம் ரூபாய் நாணயம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யும் சிறிய விவசாயிகள் பயன்பெற 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com