மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தேவை உள்ள அனைவருக்கும் கிடைக்கும்: முதல்வர் பேச்சு!

மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை தேவை உள்ள அனைவருக்கும் கிடைக்கும்: முதல்வர் பேச்சு!

இந்தியாவின் ஆட்சி பணி என்று சொல்லக்கூடிய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டுவதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின், குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற உங்களை முதல்வராக இருந்து பாராட்டும் அதே தருணத்தில் தந்தை ஸ்தானத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். லட்சக்கணக்கானோர் எழுதிய தகுதி தேர்வில் ஒரு சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும், அப்படி வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இதில் சில முகம் கிராமங்களில் இருந்தும், சில முகம் முதல் தலைமுறை பட்டதாரியாகவும், சில முகம் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. நீங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ ஆர் எஸ் போன்ற பணிகளுக்கு தேர்வாகியுள்ளது உங்களுடைய பொறுப்பை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.

கிராமப்புற மக்களின் வளர்ச்சி என்பது அரசின் திட்டங்கள் மூலம் தான் நடைபெறும். கிராமப்புற மக்களும் வளர வேண்டும் என்றால் அரசின் திட்டங்கள் கிராமப்புற பகுதிகளை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு உங்களைப் போன்ற வருங்கால அதிகாரிகளினுடைய பணி மிக அதிக அளவில் தேவை. மேலும் மக்களிடம் கனிவாக பழகுங்கள், மக்கள் தான் மேலதிகாரிகள், அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள், தொடர்ந்து படியுங்கள் என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு கோடி பெண்களுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறோம். இதற்கு கலைஞரின் பெயரை சூட்டி உள்ளோம். கலைஞர் தான் பெண்களுக்கு சம உரிமை என்ற திட்டத்தை 1989ல் கொண்டு வந்தார். இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று கேட்டவர்களுக்கு, யாருக்கெல்லாம் மாதம் ஆயிரம் ரூபாய் தேவை உள்ளதோ, அவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன். அதை பூர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது. உலக பாலின இடைவெளி அறிக்கையில் 146 நாடுகளின் பட்டியலில், இந்தியா 127 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையை மாற்றவும் பெண்களின், பொருளாதார நிலை மேம்படுத்தவும் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து ஆட்சியர்களும் தீவிரமாக இந்த பணியில் இறங்கி இருக்கின்றனர் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com